சீன அதிபர் நாளை இந்தியா வர உள்ள நிலையில் சீனாவை சேர்ந்த வாவே நிறுவனத்திற்கு ஐந்தாம் தலைமுறை இணையத்தை சோதனை நடத்த இந்தியா ஒப்புதல் வழங்கியுள்ளது
இந்திய மொபைல் காங்கிரஸ் நிகழ்வு அக்டோபர் 14-16 வரை நடைபெற உள்ளது, இந்த நிகழ்வில் வாவே நிறுவனம் 5ஜி பரிசோதனையை நிகழ்த்த உள்ளது
பாதுகாப்பு பிரச்னையால் அமெரிக்காவால் தடை செய்யப்பட்ட நிறுவனம் இந்தியாவில் தனது சோதனையை மேற்கொள்ள உள்ளது, குறிப்பிட்டத்தக்கது
மேலும் இந்திய அரசாங்கம் 5ஜியை கொள்கை ரீதியாக இன்னமும் முழுமையாக அனுமதிக்க வில்லை, எனினும் வாவே நிறுவனத்துடன் இணைந்து 5ஜி சேவையை வழங்க ஏர்டெல்,வோடாபோன்-ஐடியா நிறுவனங்கள் ஆர்வமாக உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன
-செல்வமுரளி