டில்லி:
தங்களது அணிக்கு தேர்தல் சின்னமாக குக்கர் வழங்க வேண்டும் என்று உச்சநீதி மன்றம் வரை சென்று வேதாடிய டிடிவி தினகரனுக்கு, இந்திய தேர்தல் ஆணையம் ‘பரிசுப் பெட்டி’ சின்னத்தை பொதுச் சின்னமாக வழங்கி உள்ளது.
இது அமமுகவினர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர் ஏற்கனவே பல தொகுதி களில் குக்கர், தவா உள்பட பல்வேறு வீட்டு உபயோக பொருட்கள் அனைத்தும், நிறுவனங்களின் பெயரிடப்படாத பெட்டிகளில் போடப்பட்டு, பரிசு பெட்டிகளாகவே (கிப்ட் பாக்ஸ்) வழங்கி வரும் நிலையில், தேர்தல் ஆணையமும் பரிசுபெட்டி சின்னம் ஒதுக்கியிருப்பது பெரும் வரவற்பை பெற்றது.
தமிழகத்தில், அடுத்த மாதம் 18 தேதி மக்களவைத் தேர்தலுடன் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் நடக்கிறது. இதில், அதிமுக கூட்டணி, , திமுக கூட்டணி என இரு மாபெரும் அணிகள் போட்டியிடுகின்றன. இதைத்தவிர தாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. இந்த நிலையில் அமமுக, எஸ்.டி.பி.ஐ கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.
தங்களது கட்சிக்கு குக்கர் சின்னம் வேண்டும் என்று உச்சநீதி மன்றம் வரை சென்று டிடிவி அடம்பிடிக்க, ‘குக்கர்’ சின்னம் வழங்க முடியாது என்றும் தேர்தல் ஆணையமும் அடம் பிடிக்க, உச்சநீதி மன்றம், வேறு ஏதாவது பொதுச்சின்னம் வழங்க பரிந்துரை செய்தது.
இதையடுத்து, டிடிவி தினகரன் கட்சிக்கு தேர்தல் ஆணையம் 36 சின்னங்களைத் தந்து இதில் ஒன்றைத் தெரிவு செய்து கொள்ளுங்கள் என கூறி இருந்தது அதில் டிடிவி தினகரன் தேர்ந்தெடுத்த சின்னம் பரிசுப் பெட்டி
இந்நிலையில், அமமுக வேட்பாளர் அனைவருக்கும் ‘பரிசுப் பெட்டி’ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. அமமுக-வின் அனைத்து வேட்பாளர்களுக்கும் பொது சின்னமாக ‘பரிசுப் பெட்டி’ வழங்கப்பட்டுள்ளது.
இனிமேல் தமிழகத்தில் அனைத்து வாக்காளர்களின் வீடுகளுக்கும் பரிசு பெட்டி பகிரங்கமாக தேடி வரும் என்று எதிர்பார்க்கலாம்..