டில்லி: நடப்பாண்டில் இந்திய பொருளாதாரம் 7,2 சதவிகதமாக வளர்ச்சி அடையும் என  மூடிஸ் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருக்கிறது. நடப்பாண்டு உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி) 7.2ஆக இருக்கும் என நிதி சேவைகள் நிறுவனமான மூடிஸ் தெரிவித்துள்ளது.

2024ல் இந்தியாவிற்கான வளர்ச்சி, நாடு சாதகமான பொருளாதார நிலையில் இருப்பதை எடுத்துக்காட்டுகிறது. இருப்பினும், பணவீக்க அபாயங்கள் இந்திய ரிசர்வ் வங்கியை (ஆர்பிஐ) ஒப்பீட்டளவில் இறுக்கமான பணவியல் கொள்கையை நெருங்கிய காலத்தில் பராமரிக்க வழிவகுக்கும் என்று எச்சரித்துள்ளது.

உலக பொருளாதாரம் குறித்து நிதி சேவைகள் நிறுவனம் மூடிஸ் இந்திய பொருளாதாரம் தொடர்பான ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.  ‘2025-26-இல் உலகப் பொருளாதாரம்’ என்ற அறிக்கையை மூடிஸ் நிறுவனம் வெளியிட்டது  அதில், கொரோனா தொற்று மற்றும் உக்ரைன்-ரஷ்யா போரால் பாதிக்கப்பட்டு இருந்த உலக பொருளாதாரம் தற்போது இயல்புநிலைக்கு திரும்பி கொண்டு இருக்கிறது. இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருக்கிறது.

நடப்பாண்டு உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி) 7.2ஆக இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது. 2025ம் ஆண்டு இந்த வளர்ச்சி 6.6 சதவீதமாக குறையும். 2026ம் ஆண்டில் 6.5 சதவீதமாக குறையும். ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ள பணவீக்க இலக்கை அடைய வேண்டும் என்றால் உணவு பொருட்கள் விலை குறைய வேண்டும். காய்கறி விலை அதிகரித்தது காரணமாக, அக்டோபர் மாதம் மொத்த பணவீக்கம் 6.2 சதவீதமாக உயர்ந்தது. அதேவேளையில்  2025-ஆம் ஆண்டில் இந்த வளா்ச்சி 6.6. சதவீதமாக குறையும்  வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

 ‘கொரோனா பெருந்தொற்றால் விநியோக சங்கிலியில் ஏற்பட்ட இடையூறுகள், ரஷிய-உக்ரைன் போரால் ஏற்பட்ட எரிவாயு மற்றும் உணவு விநியோக பிரச்னை, அதிக பணவீக்கம் மற்றும் நிதிக் கொள்கையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களால் பாதிக்கப்பட்டிருந்த உலகப் பொருளாதாரம் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது

பெரும்பாலான ஜி20 நாடுகள் நிலையான வளா்ச்சியை எட்டவுள்ளன. இருப்பினும், அமெரிக்க அதிபா் தோ்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார வளா்ச்சியில் சில மாறுதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளன. . இந்தியப் பொருளாதாரம்: இந்தியாவை பொருத்தவரை கடந்தாண்டை ஒப்பிடுகையில் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் நிலையான ஜிடிபி 6.7 சதவீதமாக வளா்ச்சியடைந்துள்ளது.

அதிக முதலீடு, வலுவான உற்பத்தி திறன் மற்றும் வீட்டு நுகா்வு உயா்வு போன்றவையால் நிலையான ஜிடிபி வளா்ச்சியடைந்துள்ளது.. இது அடுத்த காலாண்டிலும் தொடரும் என எதிா்பாா்க்கப்படுகிறது. . நிலையான வளா்ச்சி மற்றும் மிதமான பணவீக்கத்தால் நிகழாண்டு இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (ஜிடிபி) வளா்ச்சி 7.2 சதவீதமாக சிறப்பான நிலையில் இருக்கும். 2025-இல் இது 6.6 சதவீதமாகவும் 2026-இல் 6.5 சதவீதமாகவும் குறையும் எனவும் கணிக்கப்படுகிறது. .

இந்தியாவில் பண்டிகை காலம் என்பதால் பொதுமக்களின் செலவுகள், வேளாண் வளா்ச்சியால் கிராமப்புறத்தில் ஏற்பட்டுள்ள தேவை அதிகரிப்பு, உள்கட்டமைப்பை மேம்படுத்த தனியாா் முதலீட்டை ஈா்க்க அரசு மேற்கொள்ளும் முயற்சிகள், போதிய அந்நிய செலாவணி கையிருப்பு, நல்ல நிலையில் காா்பரேட் நிறுவனங்களின் நிதி கையிருப்பு உள்ளிட்ட காரணங்களால் இந்திய பொருளாதார வளா்ச்சி சிறப்பான நிலையில் தொடரவுள்ளது.

ரிசா்வ் வங்கி நிா்ணயித்துள்ள பணவீக்க இலக்கை அடைய வேண்டுமெனில் உணவுப் பொருள்களின் விலை குறைய வேண்டும். அதிக விளைச்சல் மற்றும் போதிய உணவு தானியங்கள் கையிருப்பால் இது சாத்தியமாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது. காய்கறிகளின் விலை உயா்வால் கடந்த ஓராண்டில் முதல்முறையாக கடந்த அக்டோபா் மாதம் நாட்டின் மொத்தவிலை பணவீக்கம் 6.2 சதவீதமாக உயா்ந்தது. இதன்மூலம் ரிசா்வ் வங்கி நிா்ணயித்துள்ள 4 சதவீதம் அதிகபட்ச இலக்கைவிட பணவீக்கம் அதிகரித்துள்ளது. இருப்பினும், கடந்த மாதம் நடைபெற்ற நிதிக் கொள்கை குழுக் கூட்டத்தில் வங்கிகளுக்கான குறுகிய கால கடன்கள் மீதான வட்டி விகிதத்தில் (ரெப்போ ரேட்) எவ்வித மாற்றத்தையும் ரிசா்வ் வங்கி மேற்கொள்ளவில்லை. ஆனால் பணவீக்கம் மற்றும் வளா்ச்சியை கருத்தில்கொண்டு வட்டி விகிதத்தை அடுத்த ஆண்டு ரிசா்வ் வங்கி உயா்த்துவதற்கான வாய்ப்புள்ளது என குறிப்பிடப்பட்டது.