இங்கிலாந்து போரில் நம்மூர் டாக்டர்கள்.


இங்கிலாந்து நாட்டில் உள்ள மிகப்பெரிய பொதுச் சுகாதார நிறுவனம்- தேசிய சுகாதார சேவைகள் ‘ நிறுவனம்.

இந்திய வம்சாவளி டாக்டர்கள் சுமார் 65 ஆயிரம் பேர் இங்கு வேலை பார்த்து வருகிறார்கள்.

அந்த நாட்டில் ஊரை அடித்து உலையில் போடும், கொரோனாவை விரட்டும் போரில் , இன்றைக்கு இவர்கள் தான் முன்னணி படைத்தளபதிகளாக உள்ளனர்.

அண்மையில் அங்கு கொரோனாவுக்கு இந்திய டாக்டர் ஒருவர் உயிர் இழந்தார். மேலும் 5 பேர் வெண்டிலேட்டர் உதவியால் சுவாசித்து வருகிறார்கள்.

இந்த நிலையில்- கொரோனாவுக்கு எதிரான இந்திய டாக்டர்களின் அர்ப்பணிப்பு அவர்கள் குடும்பத்தினரைக் கவலை கொள்ளச் செய்துள்ளது.

’’ நாளைக்கு ஏதாவது ஒன்று உங்களுக்கு நேர்ந்தால்  என்ன செய்வது?’’ என்பது குடும்பத்தார்,  கவலை.

‘’ அதற்காகப் பொறுப்பைத் தட்டிக் கழிக்க முடியுமா?’’ என்று, குடும்பத்தாரிடம் எதிர்க் கேள்வி கேட்கிறார்கள் இந்திய வம்சாவழி டாக்டர்கள்.

‘’ தினமும் குறைந்த பட்சம் 100 நோயாளிகளைப் பார்க்கிறேன். அவர்களிடம் இருந்து நோய்த் தொற்று பரவும் ஆபத்து உள்ளது என்று தெரியும். அதற்காகக் கவலைப்பட இதுவா நேரம்?’ என்கிறார், பிரிஸ்டல் என்ற இடத்தில் பணி புரியும் நம்ம ஊர் டாக்டர் ஜாய்தீப் குரோவர்.