இந்திய அணியின் நட்சத்திர வீரர் தினேஷ் கார்த்திக் இரட்டைக் குழந்தைகளுக்கு தந்தையானார்.

 

இந்த செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள தமிழக வீரரான தினேஷ் கார்த்திக், தனக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாகவும்.

இரட்டையர்களான இவர்களுக்கு கபீர் பல்லிகல் கார்த்திக், ஸியன் பல்லிகல் கார்த்திக் என்று பெயரிட்டுள்ளதாக பதிவிட்டுள்ளார்.

ஸ்குவாஷ் வீராங்கனையான இவரது மனைவி தீபிகா பல்லிகலை 2015 ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார், துபாயில் நடந்த டீ-20 போட்டிகளின் போது கொல்கத்தா அணிக்காக விளையாடிய தினேஷ் கார்த்திக் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது வர்ணனையாளராக இருந்தது குறிப்பிடத்தக்கது.