செஞ்சூரியன்
இந்திய கிரிக்கெட் அணி டி 20 போட்டியில் புதிய சாதனை படைத்துள்ளது.
தென்னாப்பிரிக்கா நாட்டின் செஞ்சூரியனில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்கா, இந்தியா இடையிலான 3வது டி20 போட்டியில்ல் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்து முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில், 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 219 ரன்களை குவித்தது.
இந்திய அணி தரப்பில், தொடக்க ஆட்டக்காரரான அபிஷேக் சர்ஷா அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார். திலக் வர்மா அதிரடியாக விளையாடி, சதமடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். தென் ஆப்பிரிக்க தரப்பில் அதிகபட்சமாக ஆண்டிலே சிமிலேன், கேசவ் மகாராஜ் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
அடுத்து 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி, 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 208 ரன்களை எடுத்தது.எனவே 11 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிப் பெற்று 4 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் தொடரை இந்தியா கைப்பற்றியது . நாளை 4 ஆவது டி20 வாண்டரர்ஸில் நாளை நடைபெறுகிறது.
இதன்மூலம் இந்த ஆண்டில் இந்திய அணி 8-வது முறையாக டி20 கிரிக்கெட்டில் 200 ரன்களைக் கடந்து புதிய சாதனை புரின்ந்துள்ளது. இதுவரை சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில், இதுவரை எந்தவொரு அணியும், ஒரு ஆண்டில் எட்டு முறை 200 ரன்கள் அடித்ததில்லை என்பதை இந்திய அணி முறியடித்து இந்த சாதனையை படைத்துள்ளது