டில்லி

ந்தியக் குத்துச்சண்டை வீரரும் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றவருமான அமித் பங்கால் உலக தரவரிசையில் முதலிடம் பெற்றுள்ளார்.

ஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் ஜூலை 23 ஆம் தேதி அன்று ஒலிம்பிக் போட்டி தொடங்குகிறது.  இதில் குத்துச்சண்டை போட்டிகள் ஜூலை 24 ம்தல் ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை நடைபெற உள்ளன.  இந்த போட்டிகளில் இந்தியாவில் இருந்து 9 வீரர் மற்றும் வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.   இதில் 52 கிலோ எடைப்பிரிவில் பிரபல இந்திய குத்துச் சண்டை வீரரான அமித் பங்கால் பங்கேற்கிறார்.

இவர் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்று உலக தரவரிசையில் முதலிடம் பெற்றுள்ளார்.  மேலுமி இதே தரவரிசையில் இவருக்கு பிறகு பிரான்சின் பிலால் பென்னாமா, அல்ஜீரியாவின் முகமது பிலிசியி, சீனாவின் ஹூ ஜியாங்குவான், உஸ்பெகிஸ்தானின் ஷகோபிதின் ஜாய்ரோவ் ஆகியோர் உள்ளனர்.

தரவரிசையில் முதலிடம் என்பது அமித் பங்காலுக்கு ஒலிம்பிக் போட்டிகளில் சாதகமான ஊழலை உருவாக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.   ஒலிம்பிக்கில் கால் இறுதி வரை அமித்     வலுவான வீரர்களுடன் மோதமாட்டார்.  காரணம் உலகத் தர வரிசையில் முதல் எட்டு இடங்களில் உள்ள வீரர்கள் காலிறுதிக்கு முன்பு நேருக்கு நேர் மோதமாட்டார்கள் என்பதே ஆகும்.