லண்டன்: ஆன்லைன் செஸ் ஒலிம்பியாட் தொடரில், இந்திய அணி முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இப்பட்டத்தை ரஷ்யாவுடன் இந்தியா பகிர்ந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
செஸ் ஒலிம்பியாட் தொடரின் 44வது சீசன் ஆன்லைன் முறையில் நடைபெற்றது. மொத்தம் 163 அணிகள் பங்கேற்ற இந்த பிரமாண்ட தொடரில், இறுதிக்கு முன்னேறியது இந்திய அணி. அதில், வலிமையான ரஷ்யாவை எதிர்கொண்டது.
முதல் சுற்றில், போட்டி 3.0-3.0 என்ற கணக்கில் டிரா ஆனது. அதேசமயம், இரண்டாவது சுற்றுப் போட்டி 1.5-4.5 என்ற கணக்கில் இந்தியாவுக்குப் பாதகமாக அமைந்தாலும், இந்தியா சார்பில், நிகால், திவ்யா ஆகியோர் விளையாடியபோது, இணையதள பிரச்சினை ஏற்பட்டதாக இந்தியா சார்பில் அப்பீல் செய்யப்பட்டது.
இதை எஃப்ஐடிஇ அமைப்பு ஏற்றுக்கொண்டது. இதனையடுத்து, சாம்பியன் பட்டம் இந்தியா & ரஷ்யாவுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.