டெல்லி: இந்திய வங்கிகள் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு டெபாசிட் நெருக்கடியை சந்தித்து வருகின்றன. இதற்கு மோடி அரசின் பொருளாதார முடிவுகள் மற்றும் வேலையின்மைதான் காரணம் என பொருளாதார நிபுணர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்தியா 2028ம் ஆண்டிற்குள் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்ட இலக்கு வைத்துள்ளது. ஆனால் தற்போதைய வளர்ச்சி அளவின் அடிப்படையில் 2028ம் ஆண்டிற்குள் மூன்று மாநிலங்கள் மட்டுமே 2028ம் ஆண்டில் 0.5 டிரில்லியன் டாலர் மதிப்பை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் ஒரு வளர்ந்த நாடாக மாறுவதற்குத் தேவையான தனிநபர் வருமான அளவை இந்திய மாநிலங்கள் எட்ட அதிக காலம் தேவைப்படலாம்.
பெரும்பாலான இந்திய மாநிலங்கள் 1,086 டாலர் முதல் 4,255 டாலர் வரையிலான தனிநபர் வருமானத்தைக் கொண்டிருப்பதால், அவை கீழ்-நடுத்தர வருமான (lower middle-income) பிரிவைச் சார்ந்தவையாக உள்ளது.
“உலக வங்கியின் 2023ம் ஆண்டிற்கான வருமான விளக்கத்தின் அடிப்படையில், கோவா மற்றும் சிக்கிம் ஆகிய இரண்டு மாநிலங்கள் மட்டுமே மேல்-நடுத்தர வருமான (upper middle-income) பிரிவைச் சார்ந்தவையாக உள்ளது. upper middle-income தகுதி பெற ஒரு மாநிலத்தின் தனிநபர் வருமானம் 4,256-13,205 டாலராக இருக்க வேண்டும்.
உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்கள் குறைந்த வருமான பிரிவைச் சார்ந்தவை (தனிநபர் வருமானம் 1,085 டாலருக்கும் குறைவு) என்று இந்திய மதிப்பீட்டு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (Ind-Ra) தெரிவித்துள்ளது.
ஆனால், மோடி அரசு வாய்ச்வடால் விட்டுக்கொண்டிருக்கிறது. கடந்த 10ஆண்டுகால பாஜக ஆட்சியில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. மோடி அரசு கூறியபடி, மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 10 லட்சம் வேலை வாய்ப்புகளை வழங்கும் திட்டம், கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டு, நாடு முழுவதும் பணி ஆணைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இருந்தாலும், நாட்டின் மக்கள் தொகையை ஒப்பிட்டு பார்த்தால், வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்தே காணப்படுகிறது.
இதன் காரணமாக சாமானிய மக்களின் வீட்டு சேமிப்பு குறைந்துள்ள நிலையில், வங்கிகளில் வைப்பு நிதி குறைந்து வருவதால், வங்கிகள் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன. மோடி அரசின் பேரழிவு முடிவுகளின் மூலம் அமைப்பு சாரா துறையின் வீழ்ச்சியை உறுதி செய்துள்ளது கூறும் பொருளாதார வல்லுநர்கள், மோடி அரசில் அதிகரித்துள்ள வேலையின்மை போன்றவற்றால், வங்கிகள் நெருக்கடியை சந்தித்து வருவதாகவும் குற்றம் சாட்டி உள்ளனர்.
மேலும், வீட்டுக் கடன்கள் மற்றும் நுகர்வுக்கான பிற கடன்கள் உள்ளிட்ட பிரிவுகள். 80%, கிரெடிட்-டெபாசிட் அல்லது சிடி விகிதம் 2005 ஆம் ஆண்டிலிருந்து அதிகபட்சமாக உள்ளது, என்பதை ரிசர்வ் வங்கியின் தற்போதைய காலம் (மார்ச் 22, FY 24) வரையிலான தரவு காட்டுகிறது. இந்த விகிதம் கிடைக்கும்போது, ஒரு வங்கியின் வைப்புத் தொகை எவ்வளவு கடனுக்காகப் பயன்படுத்தப்படுகிறது என்பதை CD விகிதம் குறிப்பிடுகிறது. இது முந்தைய நிதியாண்டின் கடைசி பதினைந்து நாட்கள் என தெரிவித்துள்ளது.
டிசம்பர் 2023க்குள் குடும்பங்களின் கடன் புதிய உச்சத்திற்கு உயர்ந்துள்ளதையும் ஆர்பிஐ அறிக்கை சுட்டிக்காட்டி உள்ளது. 2023 டிசம்பரில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கடன் அளவுகள் எப்போதும் இல்லாத அளவுக்கு 40% ஐ எட்டியதாகக் கணக்கிடப்படுகிறது, அதே நேரத்தில் நிகர நிதிச் சேமிப்பு ஜிடிபியில் 5% ஆகக் குறைந்திருக்கும்.
அதாவது, அதிகரித்து வரும் நிதி நெருக்கடியின் அறிகுறியாக, இந்தியாவின் வீட்டுக் கடன் அளவுகள் டிசம்பர் 2023க்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 40% என்ற எல்லா காலத்திலும் இல்லாத அளவுக்கு உயர்ந்ததாகக் கணக்கிடப்படுகிறது, அதே சமயம் நிகர நிதிச் சேமிப்பு அவர்களின் அளவிற்குக் குறைந்திருக்கலாம். முன்னணி நிதிச் சேவை நிறுவனமான மோதிலால் ஓஸ்வாலின் ஆய்வு அறிக்கை தெரிவித்து உள்ளது.
இந்தியாவின் முன்னணி நிதி நிறுவனமான மோதிலால் ஆஸ்வால் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் , இந்திய குடும்பங்களின் கடன் மதிப்புகள் கடந்த டிசம்பர் மாத நிலவரப்படி மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 40 சதவீதம் என்ற அளவுக்கு உயர்ந்து புதிய உச்சம் தொட்டுள்ளது. அதேசமயம் குடும்பங்களின் நிகர நிதிச் சேமிப்புகளும் குறைந்துள்ளது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிட்டால், இந்திய குடும்பங்களின் நிகர நிதி சேமிப்புகள் வெறும் 5 சதவீதம் என்கிற அளவுக்கு குறைந்துள்ளது. 2023-24-ம் நிதியாண்டில் குடும்பங்களின் செலவீனங்கள் மற்றும் முதலீடுகள் என இரண்டும் கணிசமாக பலவீனமடைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5% குறைந்த அளவு. செப்டம்பர் 2023 இல், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) குடும்பங்களின் நிகர நிதி சேமிப்பு 2022-23 இல் GDP-யில் 5.1% ஆகக் குறைந்துள்ளது என்று மதிப்பிட்டுள்ளது, இது 47 ஆண்டுகளில் இல்லாத குறைந்த அளவாகும் என சுட்டிக்காட்டி உள்ளது.
ஆனால், இதை மத்திய நிதி அமைச்சகம் கடுமையாக மறுத்துள்ளது. இது விமர்சனங்களைத் தூண்டியது. . வீடுகள் மற்றும் வாகனங்கள் போன்ற உண்மையான சொத்துக்களை வாங்குவதற்கு கடன் வாங்குவதால், குடும்பங்கள் கடந்த காலத்தை விட குறைவான நிதி சொத்துக்களை தெரிவித்துள்ள நிதியமைச்சகம், இது “துக்கத்தின் அடையாளம் அல்ல, ஆனால் அவர்களின் எதிர்கால வேலைவாய்ப்பு மற்றும் வருமான வாய்ப்புகளில் நம்பிக்கை” என விளக்கம் அளித்துள்ளது.