லடாக்,

சீனா தொல்லை கொடுத்து வரும் லடாக் பகுதியில் ஒட்டகங்கள் மூலம் பாதுகாப்பு பணியை மேற்கொள்ள இந்திய ராணுவம் திட்டமிட்டுள்ளது.

ஏற்கனவே  இந்தியா-சீனா-பூட்டான் எல்லையான டோக்லாம் பகுதியில் சீன வீரர்கள் எல்லை தாண்டி புக முயற்சித்ததால் பிரச்சினை ஏற்பட்டது. இதன் காரணமாக இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து இன்று  டோக்லம் பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது.

இந்நிலையில், சீனாவின் அத்துமீறலை தடுக்கும் வகையில், ஒட்டகம் மூலம் காண்காணிப்பு பணியை மேற்கொள்ள இந்திய ராணுவம் திட்டமிட்டுள்ளது.

இதற்காக முதல்கட்டமாக ஒரு திமில் கொண்ட ஒட்டகம், 2 திமில்கள் கொண்ட பாக்டிரியன் ஒட்டகங்களை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வகை ஒட்டகங்கள் மலைப்பகுதியில் ஆயுதங்கள், பொருட்களை 180 முதல் 220 கி.லோ வரை எளிதாக சுமந்து செல்லும் தன்மை கொண்டவை.

மணிக்கு 10 கி.மீ தூரத்தையும எளிதாகக் கடக்கும். இந்த இரு திமில் கொண்ட ஒட்டகங்கள் லடாக்கின் நுபுரா பள்ளத்தாக்கு பகுதியில் மட்டுமே காணப்படுகிறது. இதற்காக சோதனை பயிற்சி நடைபெற்று வருவதாகவும், அது  வெற்றிகரமாக அமையும் பட்சத்தில் ஒரு திமில், இரு திமில் கொண்ட ஒட்டகங்கள் இந்திய ராணுவத்தில் சேர்க்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

இதற்கான நடவடிக்கைகளை இந்திய பாதுகாப்பு ஆய்வு மற்றும் மேம்பாட்டு அமைப்பு தொடங்கிவிட்டது.

ஏற்கனவே பிகானிர் பகுதியில் ஒட்டகங்கள் கண்காணிப்பில் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.