ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வாரில் பல மாதங்களாக வனப்பகுதியில் பதுங்கியிருந்த 7 பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், ராணுவ வீரர்கள் பாரத் மாதா கி என வெற்றி முழக்கமிட்டனர்.

ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வாரில் உள்ள சத்ரூ வனப்பகுதியில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக ராணுவத்தினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சத்ரூ வனப்பகுதியை சுற்றிவளைத்த ராணுவத்தினர், பல மாதங்களாக தேடுதல் வேட்டை நடத்தி பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்தி வந்தனர். அங்கு கடந்த 326 நாட்களில் 7 பயங்ரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அதில் ஜெய்ஷ்-இ-முகமது தளபதி சைஃபுல்லா எனும் முக்கிய பயங்கரவாதியும் அடங்குவார்.
இவர் கடந்த 2024-ஆம் ஆண்டு ஜூலையில் 4 பாதுகாப்புப் படையினா் உயிரிழக்க காரணமான தாக்குதல் உள்பட பல பயங்கரவாத தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்டவா் ஆவார்.
ஜெய்ஷ்-இ-முகமது தளபதி சைஃபுல்லா சுட்டு வீழ்த்தப்பட்டதையடுத்து, ராணுவ வீரர்கள் மகிழ்ச்சியில் பாரத் மாதா கி ஜெய் என வெற்றி முழக்கமிட்டனர். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
[youtube-feed feed=1]