மணிப்பூரில் சட்ட விரோதமாக சிம்கார்ட் விநியோகித்ததால் ஏர்டெல் நிறுவனம்  சர்ச்சையில் சிக்கியுள்ளது.

அடையாளச் சான்றுகளைச் சரிபார்க்காமலேயே, முன்கூட்டியே செயல்படுத்தப்பட்ட சிம் அட்டைகள் விநியோகித்தற்காக, ஏர்டெல் நிறுவனம் மற்றும் மணிப்பூர் அனைத்து பழங்குடி மாணவர் சங்கம் (அட்சம்) மீது இந்திய இராணுவம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது.

airtel2

இது ஒரு மிகப்பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தல் மட்டுமின்றி தொலைத்தொடர்பு துறை வழிகாட்டுதல்களை மீறிய செயலாகும்.

கடந்த வியாழனன்று (ஜூலை 21) அட்சம் அமைப்பு அதன் உறுப்பினர்களுக்கு முன்கூட்டியே செயல்படுத்தப்பட்ட சிம் அட்டைகள் விநியோகிப்பதாக இந்திய ராணுவத்திற்கு தகவல் கிடைத்தது.
இவ்வாறு சுமார் 2000 சிம்கார்ட்கள் மாணவப் போராளிகள் வசம் உள்ளன என்றும் தெரிய வந்தது.
இது இராணுவத்தின் செயற்பாடுகளில் குறிப்பிடத் தக்க பாதிப்புகளை ஏற்படுத்தும் என நம்பப்படுகின்றது.
இதையடுத்து துரிதமாகச் செயல்பட்ட ராணுவ அதிகாரிகள், கவுகாத்தியில் உள்ள ஏர்டெல் தலைமைக்குத் தகவல் தெரிவித்தனர். ஏர்டெல் அதிகாரி  உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த போதிலும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, இராணுவம் ஞாயிற்றுக்கிழமையன்று (July24) ஏர்டெல் மீது ஒரு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தது. மேலும் அட்சம் அமைப்பின் மீதும் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
airtel1
ஏர்டெல் செய்தி தொடர்பாளர் இதுகுறித்து தனது நிலையைத் தெளிவுபடுத்தும் விதமாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்,
அதில், “” ஏர்டெல் ஒரு பொறுப்பான நிறுவனம். நாங்கள் அரசு விதித்துள்ள எல்லா கட்டுப்பாடுகள் மற்றும் வழிமுறைகளை முறையாகப் பின்பற்றி வருகின்றோம்.
இந்தச் சம்பவம்குறித்து விசாரணை நடத்தி வருகின்றோம். அரசு அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நன்றி: நார்த் ஈஸ்ட் டுடே