
ஸ்ரீநகர்:
இந்திய ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் பாகிஸ்தான் வீரர்கள் 3 பேர் கொல்லப்பட்டனர்.
கடந்த வாரம் காஷ்மீரில் எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி பாகிஸ்தான் ராணுவம் இந்திய வீரர்கள்மீது திடீர் தாக்குதல் நடத்தினர். பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ராணுவ மேஜர் உள்பட 4 வீரர்கள் பலியாகினர்
இத்றகு இந்தியா தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில் ஜம்மு -காஷ்மீர் மாநிலம் அருகே இந்திய ராணுவத்தினர் மீது துப்பாக்கி சூடு நடத்திய பாக் வீரர்களை இந்திய வீரர்கள் சுட்டுஙக்கொன்றனர்.
இதில் 3 பாக் வீரர்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் காஷ்மீல்ர பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தை முற்றுகையிட்ட பாதுகாப்பு படையினர், அவர்களை நோக்கி சரமாரி தாக்குதல்களை நடத்தினர்.
சிலமணி நேரங்கள் நீடித்த இந்த சண்டையில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டதாக பாதுகாப்பு படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதி பாகிஸ்தானில் இயங்கும் ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தைச்சேர்ந்தவர் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
[youtube-feed feed=1]