டெல்லி: மக்களவை தேர்தலுக்காக மட்டுமே அமைக்கப்பட்ட இண்டியா கூட்டணியை கலைக்கலாம் என காஷ்மீர் மாநில முதல்வர் ஓமர் அப்துல்லா கூறியுள்ளார். ஏற்கனவே ஆத்ஆத்மி, மம்தா, ஆர்ஜேடி  உள்பட சில கட்சிகள் காங்கிரஸ் கட்சியின்மீது நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய நிலையில், தற்போது  காஷ்மீர் முதல்வரும் வலியுறுத்தி உள்ளார்.

2024 ம் ஆண்டு நடைபெற்ற இந்திய நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியை எதிர்க்கும் விதமாக, காங்கிரஸ்  திமுக உள்பட இந்தியாவில் உள்ள 26 அரசியல் கட்சிகள் இணைந்த இந்தியா கூட்டணியை உருவாக்கினர். ஆனால், அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேற்றுமை காரணமாக பிரதமர் வேட்பாளர் யார் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் தேர்தலை எதிர்கொண்டன. ஆனால், தேர்தலில் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி கிடைக்காததால்,  கூட்டணியிள் கட்சிகளுக்கு இடையே அதிருப்தி நிலவி வருகிறது.

இந்த நிலையில்,  செய்தியாளர்களிடம் பேசிய இண்டியா கூட்டணியை கலைத்து விடலாம் என கூறியுள்ளார்.  முன்னதாக காஷ்மீர் மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் மக்கள் ஜனநாயக கட்சி கூட்டணி அமைத்து போட்டியிட்டு வெற்றிபெற்றது. ஆனால், நாடாளுமன்ற தேர்தலின்போது,  இண்டியா கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் மக்கள் ஜனநாயக கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை. இது இரு கட்சிகளுக்கும் இடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில்,  செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் கூறிய  ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு இண்டியா கூட்டணி கூட்டம் நடைபெறவில்லை. டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு ஆம் ஆத்மி, காங்கிரஸ் உள்ளிட்ட இண்டியா கூட்டணியின் கூட்டம் கூட்டப்பட வேண்டும் என வலியுறுத்தியவர்,   மக்களவைத் தேர்தலுக்காக மட்டுமே இண்டியா கூட்டணி என்றால் அதை கலைத்து விடலாம். ஆனால் சட்டப்பேரவை தேர்தலுக்கும் இக்கூட்டணி பொருந்தும் என்றால் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.  அல்லது,  எதிர்க்கட்சிகள் தனித்தனியே செயல்படலாம். இண்டியா கூட்டணியில் முக்கிய தலைமை, முக்கிய கட்சி அல்லது எதிர்கால உத்திக்கான திட்டங்கள் குறித்து எந்த தெளிவும் இல்லை. இந்த கூட்டணி தொடரும் என்பதிலும் தெளிவில்லை என தெரிவித்துள்ளார்.

“டெல்லி தேர்தலுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லாததால் இதைப் பற்றி நான் எதுவும் சொல்ல முடியாது. ஆம் ஆத்மி, காங்கிரஸ் மற்றும் களத்தில் உள்ள பிற கட்சிகள் பாஜகவை எவ்வாறு எதிர்ப்பது என்பதை முடிவு செய்ய வேண்டும்… எனக்கு நினைவிருக்கும் வரை, இந்தியா கூட்டணிக்கு எந்த கால அவகாசமும் இல்லை. துரதிர்ஷ்டவசமாக, எந்த இந்திய கூட்டணி கூட்டமும் ஏற்பாடு செய்யப்படவில்லை, எனவே தலைமை, நிகழ்ச்சி நிரல் அல்லது எங்கள் (இந்தியா கூட்டணியின்) இருப்பு குறித்து தெளிவு இல்லை… அது நாடாளுமன்றத் தேர்தலுக்காக மட்டுமே இருந்தால் கூட்டணியை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்..,” என்று  அப்துல்லா செய்தி நிறுவனமான ANI இடம் தெரிவித்துள்ளார்.

கடந்த சில வாரங்களாக, தலைநகர் போட்டிக்கான பிரச்சாரத்தில் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் ஒருவரையொருவர் குறிவைத்து  பேசி வருகின்றனர்.  இரு கட்சிகளும் இண்டியாக கூட்டணியில் இடம்பெற்றுள்ள நிலையிலும், இரு கட்சிகளும் டெல்லி சட்டமன்ற தேர்தலில் தனித்தே களமிறங்கி உள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான கட்சி ஊழல் மற்றும் மோசமான நிர்வாகத்தை குற்றம் சாட்டி வரும் நிலையில், காங்கிரஸ் பாஜகவுடன் கைகோர்த்து இருப்பதாக ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது.

இதனால், இண்டியா கூட்டணிக்குள் கலகம் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி பெற்ற தேர்தல் தோல்விகளைத் தொடர்ந்து, பிரதான எதிர்க்கட்சி இந்திய கூட்டணியை வழிநடத்த வேண்டுமா என்ற கேள்விகளும் எழுப்பப்பட்டுள்ளன. வாய்ப்பு கிடைத்தால் கூட்டணியை வழிநடத்த தயார் என  திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி முன்வந்துள்ளார், அவருக்கு சிலகட்சிகள்  ஆதரவுதெரிவித்துள்ளது  குறிப்பிடத்தக்கது.