மயூபஞ்ச்:

டிசாவில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காயமடைந்த விமானி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஒடிசாவின் மயூபஞ்ச் பகுதியில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்துக்குள்ளானது. விமானப்படை பயிற்சி யின் போது இந்த விபத்து  ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

இன்று பிற்பகல் விமானப்படைக்கு சொந்தமான ஹாக் ரக விமானம் இந்த விபத்துக்குள்ளதாகவும்,  வழக்கமான பயிற்சிக்காக கலகுன்டாவில்  இருந்து வான்வழியாக சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

 

இந்த விபத்தில் இருந்து விமானி காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார் எனவும், பின்னர் அவர் சிகிச்சைக்காக ஜார்கண்ட் தலைமை மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஒடிசா-ஜார்கண்ட் எல்லைப் பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்திற்கான காரணம் இதுவரை  அறிவிக்கப்படவில்லை.

இன்று நடைப்பெற்ற பயிற்சி ஓட்டத்தின் போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்திற்கான காரணம் குறித்து ஆராயப்பட்டு வருகிறது என விமானப்படை தகவல்கள் கூறுகின்றன.

Today afternoon one Hawk aircraft met with an accident. The aircraft was airborne from Kalaikunda on a routine training sortie. The trainee pilot ejected safely. A CoI will investigate the cause of the accident: Indian Air Force