பாகிஸ்தான்:

பாகிஸ்தான் எல்லைப்பகுதிக்குள் புகுந்து பயங்கரவாத முகாம்களை இந்திய விமானப்படை இன்று அதிகாலை வேட்டையாடி உள்ள நிலையில், பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, நாடு முழுவதும் உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எல்லைப்பகுதி தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.  இந்திய விமானப்படையை  உஷார் நிலையில் இருக்க பாதுகாப்புத்துறை அமைச்சகம் அறிவித்து உள்ளது.

கடந்த மாதம் காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனம் மீது ஜெய்ஷ்இ முகமது என்ற பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்படும்  பயங்கரவாத அமைப்பை சேர்ந்த தற்கொலைப்படை பயங்கரவாதி நடத்திய  வெடிகுண்டு தாக்குதலில் 44 வீரர்கள் பலியானார்கள்.  பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிகழ்வால் நாடு முழுவதும் கொந்தளிப்பான சூழல் உருவானது.

இதையடுத்து, பாகிஸ்தான், இந்தியா இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், இன்று அதிகாலை இந்தியா விமானப்படையை சேர்ந்த 6 விமானங் கள் பாகிஸ்தான் எல்லைப்பகுதிக்குள் புகுந்து  பாகிஸ்தானின் முக்கிய தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளன. இதில் பாகிஸ்தானில் இயங்கிய முக்கிய தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளன” என்று செய்தி வெளியாகி உள்ளது.

இந்தத் தாக்குதல் குறித்து இந்தியப் பாதுகாப்புத் துறை, ”பாகிஸ்தான் பகுதியில் இந்திய விமானங்கள் எல்லை மீறித் தாக்குதல் நடத்தியது குறித்த தகவல் ஏதும் எங்களிடம் இல்லை” என்று தெரிவித்துள்ளது.

இந்த  நிலையில் இந்தியாவின் தாக்குதல் குறித்து பாகிஸ்தான் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர், ”முஸாஃபராபாத் துறைமுகத்தில் இந்திய விமானங்கள் ஊடுருவித் தாக்குதல் நடத்தின என்றும் கூறி உள்ளார்.

இந்த சம்பவம் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்திய ராணுவத்தின் தாக்குதலுக்கு பாகிஸ்தான் ராணுவம் எதிர்தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக நாடு முழுவதும் உயர் பாதுகாப்புக்கு இந்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.

எல்லைப்பகுதிகள் உள்பட அனைத்து பகுதிகளிலும் விழிப்போடு கண்காணிக்கும் படி முப்படைகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. ரா போன்ற உளத்துறை அமைப்புகளையும் முடுக்கி விட்டுள்ளது. விமானப்படை மிகவும் எச்சரிக்கையோக கண்காணிக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.