சென்னை: மநீம தலைவர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகும் இந்தியன்2 திரைப்படம் தினசரி 5 காட்சிகள் திரையிட தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி உள்ளது. மற்ற நடிகர்களின் படம் வெளியிடவே முடியாத நிலையில், இந்த படத்தை எந்தவித தடங்களுமின்றி வெளியிட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது,.
இந்த படத்தை முதலமைச்சரின் மகனான விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் தயாரித்துள்ள நிலையில், காலை 9மணி முதல் அதிகபட்சமாக ஒரு திரையில் 5 காட்சிகள் ஒளிபரப்ப தமிழ்நாடுஅரசு தாராள அனுமதி கொடுத்துள்ளது.
நடிகர் கமல்ஹாசனின் நடிப்பில் உருவான இந்தியன் 2 படம் நாளை (ஜூலை 12ந்தேதி) உலககெங்கும் திரையிடப்படுகிறது. தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின், ரெட் ஜெயண்ட்ஸுடன் இணைந்து லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்தியன் 2 , ஊழலுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தும் சுதந்திரப் போராட்ட வீரர் சேனாபதியின் சின்னமான கதாபாத்திரத்தை கமல் மீண்டும் நடிக்கிறார். இதில், நடிகர் சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், விவேக், காஜல் அகர்வால், எஸ்.ஜே. சூர்யா, பாபி சிம்ஹா, பிரம்மானந்தம், சமுத்திரக்கனி, நெடுமுடி வேணு, டெல்லி கணேஷ், மனோபாலா, ஜெகன், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் இடம்பெற்றுள்ளது. குல்ஷன் குரோவர். அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்க, ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார்.
இந்தியன் திரைப்படம் ஏற்கனவே கடந்த 1996ம் ஆண்டு வெளியாகி வசூலில், சக்கைபோடு போட்ட நிலையில், இந்தியன் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் 28 ஆண்டுகள் கழித்து நாளை உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இந்த நிலையில், படத்திற்கான சிறப்பு காட்சிக்கு தமிழ்நாடுஅரசு அனுமதி வழங்கி உள்ளது.
முன்னதா,க இந்தியன் 2 சிறப்புக் காட்சியை திரையிட திரையரங்குகளுக்கு அனுமதி கோரி லைகா தயாரிப்பு நிறுவனம் தரப்பில் தமிழக அரசிடம் முறையிடப்பட்டி ருந்தது. இதனைத் தொடர்ந்து, பல்வேறு நிபந்தனைகளுடன் சிறப்புக் காட்சியை திரையிடுவதற்கு நாளை ஒருநாள் மட்டும் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, நாளை காலை 9 மணிக்குதான் முதல் காட்சி தொடங்க வேண்டும் என்றும் நள்ளிரவு 2 மணிக்கு கடைசி காட்சியை முடித்துவிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஒரு திரையில் அதிகபட்சம் 5 காட்சிகள் மட்டுமே திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
உரிய போலீஸ் பாதுகாப்புடன் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு இல்லாத வகையில் ஏற்பாடுகளை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. திரையரங்கு களில் ஒரு காட்சி முடிந்து அடுத்த காட்சி ஒளிபரப்புவதற்கு இடையே சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற போதிய நேரம் ஒதுக்கவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.