பரபரப்பான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை 11 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா

Must read

 

சவுத்தாம்டன்:

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை 11 ரன் வித்தியாசத்தில் வென்றது இந்தியா.

இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் உலகக்கோப்பை தொடரின் 28-வது லீக் ஆட்டம் சவுத்தாம்டனில் இன்று மதியம் 3 மணிக்கு தொடங்கியது.

டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக லோகேஷ் ராகுலும் ரோகித் சர்மாவும் களமிறங்கினர்.

ரோகித் சர்மா ஒரு ரன்னில் வெளியேறினார். ஆப்கானிஸ்தான் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினர். அதனால் இந்திய அணியின் ரன்வேகம் குறைந்தது.

ஆனாலும் விராட் கோலி, கேதார் ஜாதவ் ஆகியோர் ஓரளவு சிறப்பாக ஆடி அரை சதமடித்தனர்.

கோலி 67 ரன்னிலும், கேதார் ஜாதவ் 52 ரன்னிலும் அவுட்டாகினர். இறுதியில், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் மட்டுமே எடுத்தது.

ஆப்கானிஸ்தான் தரப்பில் குல்பதின் நயீப், ரஷித் கான் 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
இதையடுத்து, 225 ரன்களை இலக்காக கொண்டு ஆப்கானிஸ்தான் அணி இறங்கியது.

ஹஸ்மதுல்லா சசாயும், கேப்டன் குல்பதின் நயிபும் ஆடினர். நயிப் 27 ரன்னிலும், ரஹ்மத் ஷா 34 ரன்னிலும் ஹஸ்மதுல்லா ஷஹிதி 21 ரன்னிலும் அவுட்டாகினர். அடுத்து இறங்கிய மொகமது நபி ஓரளவு தாக்குப்பிடித்து அரை சதமடித்தார். இறுதி ஓவரில் 52 ரன் எடுத்து அவுட்டனார்.

இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி 49.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 213 ரன்களை எடுத்து தோற்றது. இந்தியா 11 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இறுதி ஓவரில் ஷமி ஹாட்ரிக் விக்கெட் எடுத்து அசத்தினார்.

இந்தியா சார்பில் ஷமி 4 விக்கெட்களும், பும்ரா, சாஹல், பாண்டியா ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

உலகக் கோப்பை போட்டியில்

ஹாட்ரிக் விக்கெட் எடுத்த பவுலர்கள்

சேத்தன் சர்மா – 1987
சக்லைன் முஸ்டக்-1999
சமீந்தா வாஸ்-2003
ப்ரெட்லீ -2003
லஷித் மல்லிங்கா- 2007( 4 பந்துகளில் 4 விக்கெட்கள்)
கேமர் ரோச்-2011
லஷித் மல்லிங்கா- 2011
ஸ்டீபன் ஃபின்-2015
ஜேபி துமினி-2015
முகமது ஷமி-2019

More articles

Latest article