ஹராரே:
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாவே அணி, 161 ரன்கள் எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
162 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய இந்திய அணி 25.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 167 ரங்கள் எடுத்து, ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றி மூலம், 3 நாள் தொடரில் 2 போட்டிகளில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை கைப்பற்றியது.
இரு அணிகள் இடையேயான 3வது ஒருநாள் போட்டி வரும் 22-ஆம் தேதி நடைபெற உள்ளது.
Patrikai.com official YouTube Channel