இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்ற டி20 உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று கோப்பையை கைப்பற்றியது.

அமெரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகளில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை போட்டியின் இறுதியாட்டம் பார்படாஸில் இன்று நடைபெற்றது.

முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது.

177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் மட்டுமே எடுத்தது.

16 ஓவர் முடிவில் 151 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்த தென் ஆப்பிரிக்க அணி நான்கு ஓவரில் 26 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற வலுவான நிலையில் இருந்தது.

பின்னர், விக்கெட்டுகள் மளமளவென விழுந்ததை அடுத்து அந்த அணி வெற்றியை நழுவவிட்டது.

இந்திய அணியில் விராட் கோலி அதிகபட்சமாக 76 ரன்கள் எடுத்தார் அவரைத் தொடர்ந்து அக்ஸர் படேல் 47 ரன்கள் எடுத்தார்.

தென் ஆப்பிரிக்க அணியில் அதிகபட்சமாக க்ளாஸன் 52 ரன்கள் எடுத்தார்.

இந்திய அணியின் ஹர்திக் பாண்டியா அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.