அகமதாபாத்: இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டி-20 போட்டியை, 36 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, இங்கிலாந்து அணிக்கெதிரான டி-20 தொடரையும் 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்களில், 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 224 ரன்களை சேர்த்தது.
பின்னர், பெரிய சவாலான இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணி, ஜோஸ் பட்லர் மற்றும் டேவிட் மாலன் ஆட்டத்தால் மிரட்டியது. 12 ஓவர்கள் வரை, அந்த அணியும் வெல்லலாம் என்றே கருதப்பட்டது.
ஆனால், அதன்பிறகு நிலைமை மாறியது. தேவைப்படும் ரன்ரேட் மிகவும் அதிகமாக இருந்த நிலையில், அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழத் தொடங்கின. அரைசதம் அடித்த ஜோஸ் பட்லர் & டேவிட் மாலன் இருவருமே ஆட்டமிழந்தனர்.
அதன்பிறகு, இங்கிலாந்திற்கு தேவையான ஆட்டத்தை ஆடுவதற்கு ஆட்கள் இல்லை. முடிவில், 20 ஓவர்களில், 8 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்கள் எடுத்து, 36 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று, டி-20 தொடரையும் இழந்தது இங்கிலாந்து.
இந்தியா சார்பில், ஷர்துல் 3 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் குமார் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
டெஸ்ட் தொடரை கைப்பற்றிய நிலையில், தற்போது டி-20 தொடரையும் இந்திய அணி கைப்பற்றியுள்ளது.