மெல்போர்ன்: முத்தரப்பு பெண்கள் டி-20 போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தியது.

இந்தியப் பெண்கள் அணி தனது நான்காவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை சந்தித்தது. டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வுசெய்தது இந்தியா.

ஆஸ்திரேலிய அணியின் ஆஷ்லெய் 57 பந்துகளில் 93 ரன்கள் எடுத்து மிரட்டினார். அதேசமயம், மற்ற வீராங்கனைகள் சொல்லிக்கொள்ளும் வகையில் சோபிக்கவில்லை. இறுதியில், 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்களை எடுத்தது ஆஸ்திரேலியா.

பின்னர், சற்று சவாலான இலக்கை நோக்கி களமிறங்கிய இந்தியாவுக்கு, மந்தனா 55 ரன்களும், ஷபாலி 49 ரன்களும் ஜெமிமா 30 ரன்களும் எடுத்துக்கொடுத்தனர். முடிவில், 19.4 ஓவர்களில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 177 ரன்களை எடுத்தது.

அடுத்து, இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலானப் போட்டியில் இங்கிலாந்து வென்றால், இறுதிப்போட்டியில் இந்தியா – இங்கிலாந்து விளையாடும். ஆஸி. வென்றால், ரன் ரேட் அடிப்படையில் ஆஸியா அல்லது இந்தியாவா என்பது முடிவாகும்.