
அகமதாபாத்: இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியை, இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதன்மூலம் டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 112 ரன்கள் மட்டுமே எடுக்க, இந்திய அணியோ 145 ரன்களை சேர்த்தது. பின்னர், தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து 81 ரன்களுக்கே ஆல்அவுட் ஆனது.
இதனால், இந்தியாவுக்கு 49 ரன்களே வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதனையடுத்து, எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி, 7.4 ஓவர்களிலேயே, விக்கெட் இழக்காமல் இலக்கை எட்டி, 10 விக்கெட் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றியைப் பெற்றது.
ரோகித் ஷர்மா 25 ரன்களும், ஷப்மன் கில் 15 ரன்களும் அடித்தனர். இந்த குறைந்த இலக்கு சூழலிலும்கூட, இங்கிலாந்து அணி 9 கூடுதல் ரன்களை விட்டுக்கொடுத்ததோடு, பீல்டிங்கிலும் சொதப்பியது.
இங்கிலாந்து தரப்பில் ஜோ ரூட் மற்றும் ஜேக் லீச் மட்டுமே பந்து வீசினர். இந்த வெற்றியின் மூலம், 4 போட்டிகள் கொண்ட இத்தொடரில், இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
[youtube-feed feed=1]