டில்லி

சியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானில் நடைபெறும் போட்டிகளில் இந்தியா விளையாடாது என அறிவிக்கப்பட்டுள்ளது

ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 17 வரை ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. தற்போது போட்டியை நடத்தும் உரிமையைப் பாகிஸ்தான் பெற்றுள்லாலும் இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் சென்று விளையாட மறுப்பு தெரிவித்ததால் ஆசியக் கோப்பை கிரிக்கெட்டை கலப்பின மாதிரி அடிப்படையில் நடத்துவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டது.  இதை நஜாம் சேதியின் தலைமையின் கீழ் இயங்கிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏற்றுக்கொண்டது.

எனவே பாகிஸ்தானில் 4 லீக் ஆட்டங்களையும், தொடரின் எஞ்சிய 9 ஆட்டங்களை இலங்கையில் நடத்துவது எனமுடிவு செய்யப்பட்டது. இம்மாத தொடக்கத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக குழு தலைவராக ஸாகா அஷ்ரப் பொறுப்பேற்றார். ஸாகா அஷ்ரப், நஜாம் சேதியின் கீழ் செயல்பட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏற்றுக்கொண்டிருந்த கலப்பின மாதிரி ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் அட்டவணை குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார்.

சர்வதேச கிரிக்கெட் குழு தலைமை நிர்வாகிகள் கூட்டத்தில் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக கமிட்டி தலைவர் ஸாகா அஷ்ரப்பை நேரில் சந்தித்து ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் அட்டவணையை உறுதி செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஐபிஎல் சேர்மன் அருண் துமால்,

“பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ஸாகா அஷ்ரபை சந்தித்து ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் அட்டவணையை இறுதி செய்துள்ளார். இதன்படி லீக் சுற்றின் 4 ஆட்டங்கள் பாகிஸ்தானில் நடைபெறும்.

இதைத் தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் உட்பட எஞ்சிய 9 போட்டிகளும் இலங்கையில் நடத்தப்படும். இந்திய அணி, பாகிஸ்தான் சென்று விளையாடுவது குறித்து ஆலோசிக்கப்படவில்லை. இந்திய அணி அங்குச் செல்லாது”

என்று தெரிவித்துள்ளார்.