டில்லி

கத்தாரில் தற்போது நடைபெற்று வருவது அரபு நாடுகளின் உள்நாட்டு  விவகாரம் என்றும் இது இந்தியாவை எந்த வகையிலும் பாதிக்காது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறினார்

கத்தாருடன் மற்ற அரபு நாடுகள் உறவை முறித்துக் கொண்டதாக நேற்று தெரிவித்தன.

கத்தாரில் சுமார் 6.5 மில்லியன் இந்தியர்கள் வசித்து வருகிறார்கள்

இவர்களில் பேரும்பாலானோர் கேரளாவை சேர்ந்தவர்கள்.

கத்தாரில் உள்ள அனைத்து இந்தியரின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும் என கேரளா முதலமைச்சர் ப்ரணாயி விஜயன் பிரதமர் மோடிக்கும் சுஷ்மாவுக்கும் கடிதங்கள் அனுப்பி உள்ளார்.

பிரணாயி விஜயன் தாம் எழுதிய கடிதத்தில் இந்த விடயத்தில், கேரள அரசு தன் முழு ஒத்துழைப்பையும் ஆதரவையும் மத்திய அரசுக்கு அளிக்கும் என குறிப்பிட்டிருந்தார்

இதையொட்டி ஒரு பேட்டியில் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்ததாவது

அரபு நாடுகளின் இந்த நடவடிக்கையால் இந்தியாவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது

இது முழுக்க முழுக்க உள்நாட்டு விவகாரம்

நமக்கு அங்குள்ள இந்தியர்களின் பாதுகாப்ப் மட்டுமே முக்கியம்

அங்கு வசிக்கும் இந்தியர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது

விரைவில் வளைகுடா நாடுகளின் பிரச்னைக்கு சுமூக தீர்வு ஏற்படும் என தாம் நம்புவதாகவும் குறிப்பிட்டார்

 

ஆனால் இங்குள்ள சில நெட்டிசன்கள் இந்தியாவை மறைமுகமாக பாதிக்ககூடும் என சொல்கின்றனர்

பார்க்க :  https://patrikai.com/the-crisis-in-qatar-will-affect-india-indirectly/