பீஜிங்:

என்.எஸ்.ஜி., எனப்படும் அணுசக்தி வினியோக நாடுகள் அமைப்பில் இந்தியா இணைய சீனா மீண்டும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

அமெரிக்கா, சீனா உட்பட 48 நாடுகளை கொண்ட அணுசக்தி விநியோக நாடுகள் அமைப்பு செயல் பட்டு வருகின்றன.

இந்த அமைப்பில் இந்தியாவும் தன்னை இணைத்துக்கொள்ள பலமுறை முயற்சித்து வருகிறது.

கடந்த ஆண்டு தென் கொரியாவில் நடைபெற்ற  என்.எஸ்.ஜி. கூட்டத்தில்  இந்தியாவின் கோரிக்கை குறித்து பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

ஆனால், இந்தியாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அண்டை நாடான சீனா, பாகிஸ்தான்  விண்ணப்பங்கள் அளித்துள்ளன.

அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளின் ஆதரவு இருந்தபோதும், சீனாவின் எதிர்ப்பால், உறுப்பினராகும் வாய்ப்பை இந்தியா இழந்தது.