டில்லி
மத்திய தொலைதொடர்புத் துறை அமைச்சர் வரும் 2020ல் 5ஜி தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப் படும் என அறிவித்துள்ளார்.
இணைய உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உலகெங்கும் அதிகரித்து வருகிறது. முதலில் 2ஜி என இருந்த இணைய வேகம் பின்பு 3ஜி ஆகி தற்போது 4ஜி ஆகி உள்ளது. 4ஜி என்பது அதிகபட்ச வேகமாக வினாடிக்கு 10 மெகா பைட்கள் ஆகும். ஆனால் அவ்வளவு வேகம் இருப்பதில்லை.
இதனால் இணைய வேகத்தை மேலும் அதிகரிக்க உயர்மட்ட 5 ஜி குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அது குறித்து மத்திய தொலை தொடர்புத் துறை அமைச்சர் மனோஜ் சின்கா, “தற்போது உயர்மட்ட 4 ஜி குழு ஒன்று அமைத்துள்ளோம். அந்தக் குழுவில் 5 ஜி தொழில்நுட்ப முறைக்கு இந்திய தொலை தொடர்புத் துறையை மேம்படுத்த வேண்டிய ஆலோசனைகள், மற்றும் தொழில் நுட்ப முறை பற்றி ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
உலகமெங்கும் 2020ல் 5 ஜி தொழில்நுட்பம் வரும் என எதிர்பார்க்கப்படும் வேளையில் அதே நேரத்தில் இந்தியாவிலும் 5 ஜி அறிமுகப் படுத்தப்படும். அந்த 5 ஜி தொழில்நுட்பத்தில் இணைய வேகம் நகர்ப்புறங்களில் வினாடிக்கு 10000 மெகாபைட்டுகளாகவும், கிராமப்புறங்களில் வினாடிக்கு 1000 மெகாபைட்டுகளாகவும் இருக்கும். இதற்காக ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.