நியூயார்க்

அமெரிக்காவில் நிகழ்ந்த ஒரு ஆய்வின் மூலம் 2028ல் ஜப்பானை பொருளாதார வளர்ச்சியில் இந்தியா பின் தள்ளி விடும் என தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவின் புகழ் பெற்ற வங்கி பாங்க் ஆஃப் அமெரிக்கா.  இதன் தலைமை அலுவலகம் நியூயார்க்கில் அமைந்துள்ளது.   இந்த வங்கி சமீபாத்தில் இந்திய பொருளாதாரத்தைப் பற்றி ஆய்வு நடத்தில் அந்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், “இந்தியா தற்போது உள்நாட்டு உற்பத்தியில் 7% வளர்ச்சி அடைந்துள்ளது.  இந்த வளர்ச்சி மேலும் தொடர வாய்ப்பு உள்ளது.  அதனால் வரும் 2028ஆம் ஆண்டில் அதாவது இன்னும் பத்து ஆண்டுகளில் மேலும் வளர்ச்சி பெறும்.  அப்போது இந்தியா ஜப்பானை பின் தள்ளி உலகப் பொருளாதாரத்தில் மூன்றாம் இடம் வகிக்கும்.   அத்துடன்  இந்த வளர்ச்சியானது வரும் ஆண்டிலேயே அமெரிக்காவை விட அதிகரிக்கும்” என தெரிவித்துள்ளது.