கொழும்பு: ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபாரமாக விளையாடி பாகிஸ்தானை தூக்கி வீசியது. இந்திய அணியின் அபாரமான பந்து வீச்சில், பாகிஸ்தான் அணி சுருண்டது. இதன் மூலம் இந்திய அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இஷான் கிஷனின் அதிரடி அரைசதமும், பந்துவீச்சாளர்களின் நேர்த்தியான பவுலிங்கும் இணைந்து இந்திய அணிக்கு 61 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைத் தந்தது. இந்த வெற்றியுடன் இந்தியா குரூப்பில் முதலிடம் பிடித்து முன்னிலை பெற்றுள்ளது.

2026 ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் குரூப் ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் குரூப் ஏ பிரிவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மோதல் நேற்று (15.02.2026) ஞாயிறன்று இலங்கை கொழும்பு மைதானத்தில் நடைபெற்றது. உலகம் முழுவதும் உள்ள மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இந்த போட்டியில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
பாகிஸ்தான் பந்துவீச்சை எதிர்கொள்ள இந்திய அணியின் தொடக்க வீரர்களாக அபிஷேக் வர்மா மற்றும் இஷான் கிஷன் களம் இறங்கினர். ஆனால், முதல் ஓவரிலேயேஅபிஷேக் சர்மா டக் அவுட் ஆகி வெளியேறினார். இது இந்திய ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து இஷான் கிஷன் உடன் திலக் வர்மா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடி, அணிக்கு அடித்தளத்தை ஸ்டாங்காக அமைத்தது. ‘
இஷான் கிஷன் பவர்பிளே ஓவர்களில் பாகிஸ்தான் பந்துவீச்சார்களை நாலபுறமும் சிதறடித்தார். அதிரடியாக ஆடி தனது அரைசதத்தை கடந்த இஷான் கிஷன் 40 பந்துகளில் 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த இன்னிங்ஸ்ஸில் 10 பவுண்டரிகளும், 3 சிக்சர்களும் அடக்கம்.
இஷான் கிஷன் அவுட் ஆன போது இந்திய அணி 8.4 ஓவர்களில் 88 ரன்கள் எடுத்திருந்தது. அதன் பின்னர் பாகிஸ்தான் பவுலர்கள் நல்ல கம்பேக் கொடுத்தனர். முதலில் பவுண்டரி களை கட்டுப்படுத்திய பாகிஸ்தான் பவுலர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதனால், இந்திய அணி ஒரு கட்டத்தில் 200 ரன்களை தாண்டும் என எதிர்பார்த்த நிலையில் அதை பாகிஸ்தான் பவுலர்கள் தடுத்தனர்.
கடைசி ஓவரில் இந்திய பேட்ஸ்மேன்கள் ஆறுதல் தரும் விதமாக 16 ரன்கள் எடுத்து 175 ரன்கள் என்ற டீசென்டான ஸ்கோரை அடித்தனர். இதன்மூலம், பாகிஸ்தான் அணிக்கு 176 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயித்தது.

176 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் டாப் ஆடர் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களின் அசத்தல் பவுலிங்காள் ஆட்டம் கண்டது. தொடக்க வீரர் பர்ஹான் முதல் ஓவரிலேயே ஹார்திக் பந்துவீச்சில் டக் ஆவுட் ஆகி வெளியேறினார். அதைத் தொடர்ந்து சயிம் ஆயுப் 6 ரன்களிலும், சல்மான் ஆகா 4 ரன்களிலும் பும்ரா பந்துவீச்சில் அவுட் ஆகினர். இதனால் பாகிஸ்தான் அணி வீரர்கள் சோர்வடைந்தனர். இந்திய அணி வீரர்கள் மேலும் உற்சாகத்துடன் விளையாடினர்.
இந்த நிலையில், அடுத்த விக்கெட் வெளியேறியது. பாகிஸ்தான் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாபர் அசாம் அக்சர் படேல் பந்துவீச்சில் 5 ரன்களுக்கு அவுட் ஆனார். இதன்மூலம், பவர்பிளேவுக்குள்ளேயே பாகிஸ்தான் 34 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்து தடுமாறியது. அதைத் தொடர்ந்து உஸ்மான் கான் ஷஹ்டப் கான் ஓரளவு பொறுமையாக ஆடி பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்தனர். இந்த ஜோடியும் 73 ரன்கள் எடுத்த போது பிரிந்தது.
அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்து நடையை கட்டினர். இதனால், 18 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் 114 ரன்களுக்கு ஆல் அவுடானது.
இதன்மூலம் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 6 புள்ளிகளுடன் குரூப்-இல் முதல் இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் அணி 4 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது. இந்திய அணி தனது கடைசி குரூப் போட்டியில் வரும் பிப்ரவரி 18ம் தேதி அன்று நெதர்லாந்து அணியை எதிர்கொள்கிறது.
[youtube-feed feed=1]