* மொத்தம் 3 போட்டிகளைக் கொண்ட இத்தொடரின் அனைத்து டாஸ்களையும் இந்தியா தோற்றது.

* இத்தொடரில், அனைத்துப் போட்டிகளிலும் இந்தியாவே முதலில் பேட்டிங் செய்தது.

* மூன்று போட்டிகளிலுமே, இந்தியா 300 ரன்களுக்கு மேல் எடுத்தது.

* மூன்றாவது போட்டியில், இங்கிலாந்து தோற்றாலும், இந்தியா செய்த பீல்டிங் தவறுகளால், இந்திய அணியை பாடாய்படுத்திவிட்டது இங்கிலாந்து.

* மேலும், மூன்றாவது ஒருநாள் போட்டியில், இரு அணி நிர்வாகிகளும், இறுதி கட்டத்தில், பதற்றத்தின் உச்சிக்கே சென்றுவிட்டனர்.

* இரண்டாவது போட்டியின்போது, முக்கியமான கட்டத்தில் ஹர்திக் பாண்ட்யாவை, சில ஓவர்கள்கூட பெளலிங் செய்ய பயன்படுத்தாத கோலி, மேலும், முதல் ஒருநாள் போட்டியிலும் பயன்படுத்தாத கோலி, இன்று அவரை மொத்தம் 9 ஓவர்கள் பயன்படுத்தினார்.

* முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் விக்கெட்டுகள் எடுத்த பிரசித் கிருஷ்ணா, இன்று சுத்தமாக எடுபடாமல் போனார்.

* மூன்று ஒருநாள் போட்டிகளிலும், இந்தியாவின் பேட்டிங் வலிமை பறைசாற்றப்பட்டுள்ளது.

* ஒருநாள் தொடரையும் வென்றதன் மூலம், இங்கிலாந்துக்கு எதிரான அனைத்துவித கிரிக்கெட் தொடர்களையும் முழுமையாக வென்றுள்ளது இந்திய அணி.