சிட்னி: ஆஸ்திரேலியாவில் முகாமிட்டுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்கள் யாருக்கும் கொரோனா இல்லை என இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ தகவல் தெரிவித்து உள்ளது.
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு விளையாடி வருகிறது. ஆஸ்திரேலிய அணியுடன் அங்கு இந்திய அணி அ3 ஒருநாள் போட்டிகள், 3 டி20 போட்டிகள், 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் வகையில் கடந்த ஆண்டு அங்கு சென்று விளையாடி வருகிறது.
ஒருநாள் போட்டி தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் இழந்தாலும் டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று ஆஸ்திரேலியாவை பழி தீர்த்தது. ஒருநாள் தொடர், டி20 தொடர் முடிவடைந்ததையடுத்து, இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டிசம்பர் 17ம் தேதி முதல் டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. தொடர்ந்துரு, இந்திய அணி ஆஸ்திரேலியா ஏ அணியுடன் பயிற்சி ஆட்டத்திலும் விளையாடியது.
அங்கு சென்ற இந்திய அணி வீரர்களுக்கு அவ்வப்போது கொரோனா சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், புத்தாண்டையொட்டி, மெல்போர்னில் உள்ள ஓட்டல் ஒன்றுக்கு இந்திய அணி வீரர்கள் ரோஹித் சர்மா, பிரித்வி ஷா, ரிசப் பண்ட் ஆகியோர் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, இந்திய வீரர்கள் அனைவருக்கும் மீண்டும் ஆர்டி.பிசிஆர் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சோதனை முடிவுகள் நேற்று வெளியாக உள்ளன. இதில், அங்கு முகாமிட்டுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்கள், பயிற்சியாளர்கள், உதவியாளர்கள் யாருக்கும் கொரோனா இல்லை என்று பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக பிசிசிஐ தகவல் தெரிவித்துள்ளது.