ஒருநாள் தொடர்: 289 ரன்களை இலக்காக கொண்டு விளையாடும் இந்தியா!

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்களுக்கு 5விக்கெட்டுகளை இழந்து 288 ரன்களை குவித்துள்ளது. இதனை தொடர்ந்து 289 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது.

first

ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான டெஸ்ட் தொடரை வென்றதை தொடர்ந்து இந்திய அணி ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறது. அதன்படி முதல் ஒருநாள் போட்டி இன்று சிட்னி மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் ஆரோன் பின்ஸ் 6 ரன்களிலும், அலெக்ஸ் ஹேரி 24 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். அவர்களை தொடர்ந்து அடுத்து வந்த உஸ்மான் கவாஜா, மார்ஸ் மற்றும் பீடர் அரைசதம் கடந்து அணிக்கு ரன் சேர்த்தனர். இதனை தொடர்ந்து 50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 5விக்கெட் இழப்பிற்கு 288 ரன்கள் குவித்தது. இந்திய அணியின் புவனேஷ்வர் குமார் மற்றும் குல்தீப் யாதவ் தலா 2விக்கெட்டுகளையும் ஜடேஜா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இதையடுத்து 289 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. டெஸ்ட் தொடரை போன்று ஒருநாள் தொடரையும் இந்தியா வெல்லும் என்பது ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


-=-