தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பெண்கள் குறித்து தவறாக கருத்து தெரிவித்த ஹர்திக் பாண்டியா விளம்பர தூதர ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவர் மீது பிசிசிஐ ஒழுந்து நடவடிக்கை எடுத்ததை தொடந்து அவர் விளம்பர ஒப்பந்தத்தில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.

Hardik_Pandya_train_BCCI

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ஹர்திக் பாண்டியா மற்றும் கே.எல்.ராகுல் பிரபல தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய ஹர்திக் பாண்டியா பெண்கள் குறித்து தவறான கருத்துக்களை பகிர்ந்ததால் அவருக்கு பலதரப்பில் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, ஹர்திக் மற்றும் கே.எல்.ராகுலின் பேச்சு உலக அளவில் இந்திய கிரிக்கெட் அணிக்கு தலைக்குனிவை ஏற்படுத்தி விட்டதாகவும் ரசிகர்கள் கருத்து பகிர்ந்து வந்தனர்.

இதனை தொடர்ந்து இருவரிடம் விளக்கம் கேட்டு பிசிசிஐ நோட்டீஸ் அனுப்பியது. பிசிசிஐயின் நோட்டீஸை தொடர்ந்து கிரிக்கெட் வாரியத்திற்கு இருவரும் விளக்கம் அளித்தனர். ஆனால், அவர்களது விளக்கம் ஏற்கக்கூடிய வகையில் இல்லை என தெரிவித்த பிசிசிஐ இருவரையும் ஒருநாள் போட்டியில் இருந்து நீக்கியது.

இந்நிலையில் பிரபல தனியாா் நிறுவனத்தின் விளம்பர தூதுவராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த ஹா்திக் பாண்டியா தற்போது அந்த ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இருவர் மீதும் விசாரணை முடியும் வரை அவர்களை கிரிக்கெட் விளையாட அனுமதிக்கக் கூடாது என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.