ராஞ்சி
புதிய விடியலை இந்திய நாடு காண இன்னும் இரு மாதங்கள் உள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
நேற்று ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் காங்கிரஸ் சார்பில் மாபெரும் தேர்தல் பேரணி நடந்தது. வரும் மக்களவை தேர்தல் பிரசாரத்துக்காக நடந்த இந்த பேரணியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்துக் கொண்டார். இந்த பேரணியில் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள், பொது மக்கள் மற்றும் தலைவர்கள் கலந்துக் கொண்டுள்ளனர். ராகுல் காந்தி இந்த பேரணியில் காங்கிரஸ் தொண்டர்களிடையே உரையாற்றினார்.
ராகுல் காந்தி தனது உரையில், “பிரதமர் மோடி நமது நாட்டை காக்கும் விமானப்படையிடம் இருந்து ரூ. 30000 கோடியை எடுத்து அவரது நண்பர் தொழிலதிபர் அபில் அம்பானியிடம் அளித்துள்ளார். இவ்வாறு விமானப் பணத்தை கொள்ளை அட்டிப்பது வெட்க்கக் கேடான செயலாகும் மோடி தொழிலதிபர்களில் ரூ. 3.5 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்துள்ளார். அதே நேரத்தில் மாணவர்கள் கல்விக் கடனை தள்ளுபடி செய்யவில்லை.
அடுத்து ஆட்சி அமைக்கப் போகும் காங்கிரஸ் அறிவித்துள்ள குறைந்த பட்ச ஊதிய திட்டத்தின் கீழ் ஏழைகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக பணம் போடப்படும். நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்து மோடி தொடர்ந்து தவறான தகவலை அளித்து வருகிறார். பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து சரிந்து வருகிறது. கடந்த ஐந்தாண்டுகளில் தற்போது பொருளாதார வளர்ச்சி மிகவும் குறைந்துள்ளது. இன்னும் இரண்டு மாதங்களில் இந்தியா புதிய விடியலை காண உள்ளது” என குறிப்பிட்டார்.