ஐந்து வருட இடைவெளிக்குப் பிறகு ஜூலை 24 முதல் சீன குடிமக்களுக்கு சுற்றுலா விசா வழங்குவதை இந்தியா மீண்டும் தொடங்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

கொரோனா பரவலை அடுத்து 2020ம் ஆண்டு சீன குடிமக்களுக்கு சுற்றுலா விசா வழங்குவது நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் நாளை (ஜூலை 24) முதல் சீன குடிமக்களுக்கு சுற்றுலா விசா வழங்க இந்தியா தீர்மானித்துள்ளதாக சீனாவில் உள்ள இந்திய தூதரகத்தை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஐந்து ஆண்டு இடைநிறுத்தத்திற்குப் பிறகு, சீன குடிமக்களுக்கு சுற்றுலா விசா வழங்குவதை இந்தியா மீண்டும் தொடங்கியுள்ளதால், இந்த நடவடிக்கை ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிப்பதாகக் கூறப்படுகிறது.

சீன குடிமக்கள் இந்திய சுற்றுலா விசாக்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் தங்கள் பாஸ்போர்ட் மற்றும் தேவையான ஆவணங்களை பெய்ஜிங், ஷாங்காய் மற்றும் குவாங்சோ (குவாங்டாங் மாகாணம், தென் சீனா) உள்ள இந்திய விசா விண்ணப்ப மையங்களில் சமர்ப்பிக்க சமூக ஊடகமான வீபோ வாயிலாக அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.