டெல்லி: வெளிநாடுகளில் இருந்து சார்ட்டர் விமானங்களில் இந்தியாவுக்கு சுற்றுலா பயணிகளுக்கு அக்டோபர் 15முதல் புதிய சுற்றுலா விசா வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.. மற்ற விமானங்கள் மூலம் இந்தியாவுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு நவம்பர் 15 முதல் சுற்றுலா விசா வழங்கப்பட உள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்துள்ளதை தொடர்ந்து விமான சேவைகள் படிப்படியாக தொடங்கி வருகின்றன. அதன்படி இந்தியாவிலும், விமான சேவைகள் 75 சதவிகிதம் அளவில் இயக்கப்பட்டு வருகிறது.இதையடுத்து, வெளிநாட்டு விமான சேவைகளுக் கும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அதைத் தொடர்ந்து அடுத்து வரும் 15ம் தேதி முதல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளது. இதற்காக புதிய விசா அளிக்க இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, மத்திய குடும்ப நலத் துறை, சுற்றுலாத் துறை, வெளியுறவுத் துறை அமைச்சகம் ஆலோசனை மேற்கொண்டது. அதையடுத்து த்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, வெளிநாடுகளிலிருந்து தனி விமானங்களில் இந்தியா வரும் சுற்றுலா பயணிகளுக்கு அக்.15 முதல் புதிய விசா வழங்கப்படும். அடுத்தகட்டமாக, நவம்பர் 15ம் தேதி முதல் பிற விமானங்களிலிருந்து இந்தியா வரும் சுற்றுலா பயணிகளுக்கு புதிய விசா அனுமதிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
அதேசமயம், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும், அவர்களை அழைத்து வரும் விமான நிறுவனங்களும் கொரோனா தடுப்பு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. சுமார் ஒன்றரை வருடத்துக்கு பிறகு வெளிநாட்டு பயணிகள் இந்தியாவுக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.