பலாசோர்: நீர் மூழ்கிக் கப்பல்கள் உள்பட நீண்ட தூரத்தை தாக்கி அழிக்கும் சூப்பர் சோனிக் டார்பிடோ ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளதாக டிஆர்டிஓ தெரிவித்து உள்ளது.

ஒடிசா மாநிலம் பலாசோர் கடற்கரையில் பகுதியில் இன்று நடத்தப்பட்ட சூப்பர் சானிக் ஏவுகணையுடன் இணைந்து ஏவப்பட்ட டார்பிடோ வெற்றிகரமாக இலக்கைத் தாக்கியது.   நவீன ரக டர்பிடோ ஏவுகணையானது, கடற் நீர்மூழ்கிக் கப்பல்கலைத் தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது என மத்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான டிஆர்டிஓ அறிவித்துள்ளது.

இந்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் பல்வேறு ஏவுகணை சோதனைகளை நடத்தி வெற்றி கண்டுள்ளது. அவைகள் இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட்டு உள்ளது. இதையடுத்து கடற்படைக்கு தேவையான, நீருக்குள் சென்று தாக்கி எதிரிகளின் கப்பல்களை அழிக்கும் ஏவுகணைகளை சோதனை செய்து வந்தது. அதன்படி,  உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட நவீனரக டர்பிடோ ரக ஏவுகணை தயாரிக்கப்பட்டது.

இந்த ஏவுகணை சோதனை இன்று ஒடிசா மாநிலம் பலோசர் கடற்கரை பகுதியில் நடத்தப்பட்டது. இது குறிப்பிட்ட இலக்கை வெற்றிகரமாக தாக்கி அளித்ததாக டிஆர்டிஓ தெரிவித்து உள்ளது.

ஏற்கனவே கடந்த 7ந்தேதி அன்று, நிலத்தில் இருந்து வானில் குறைந்த தொலைவில் உள்ள இலக்கைத் தாக்கி அழிக்கும் ஏவுகணை(விஎல்-எஸ்ஆா்எஸ்ஏஎம்) வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்ட நிலையில், டிச.11-ஆம் தேதி ஹெலிகாப்டரில் இருந்து ஏவக்கூடிய சந்த் எனப்படும் தொலைவில் இருந்து தாக்கும் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை சோதனை கடந்த நடத்தப்பட்டது. இதையடுத்து தற்போது டார்பிடோ ஏவுகணை சோதனை நடத்தப்பட்டு உள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அடுத்தடுத்து ஏவுகணைகளை இந்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் நடத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.