அப்துல் கலாம் தீவு. ஒரிசா
அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட நடுத்தர ரக அக்னி 2 ஏவுகணை இன்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
அக்னி 2 ஏவுகணையாந்து அணு ஆயுதங்களை ஏந்திச் சென்று சுமார் 2000 கிமீ தூரத்திலுள்ள இலக்கை துல்லியமாக தாக்கும் திறன் உடையது. 20 மீட்டர் நீளமுள்ள இந்த ஏவுகணை 17 டன் எடை உள்ளது. இதனால் 1000 கிலோ எடையுள்ள அணு ஆயுதங்களை ஏந்திச் செல்ல முடியும்.
இந்த ஏவுகணை இன்று மூன்றாம் கட்டமாக சோதனை செய்யப்பட்டது. இந்த ஒரு மாதத்துக்குள் செய்யப்பட்ட இந்த மூன்றாவது கட்ட சோதனை ஒரிசா மாநிலத்தில் உள்ள அப்துல் கலாம் தீவில் நடைபெற்றது. இந்த சோதனையிலும் இது வெற்றி பெற்றுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த அக்னி 2 ஏவுகணை முழுவதும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணை ஆகும்.