டில்லி

கொரோனா வைரஸ் பரவுவதை முன்னிட்டு சீனப் பயணிகளுக்கு அளிக்கப்பட்டு வந்த இ விசாவை இந்திய அரசு ரத்து செய்துள்ளது.

இ விசா என்பது வெளிநாட்டில் இருந்து இந்தியா வரும் வெளிநாட்டினர் மற்றும் வெளிநாட்டுக் குடிமக்களான இந்தியர்கள் ஆகியோருக்கு  வழங்கப்படுவதாகும்.   இந்த விசா குறுகிய காலத்துக்குக் குறிப்பாக வர்த்தக ரீதியாகப் பயணம் செய்பவர்களுக்கு வழங்கப்படுவதாகும்.

இன்று சீன பயணிகள் மற்றும் சீனாவில் தங்கி விட்டு வரும் பயணிகளுக்கு இ விசா அளிப்பதைத் தற்காலிகமாக நிறுத்துவதாக  இந்திய அரசு அறிவித்துள்ளது.   இந்த அறிவிப்பில், “தற்போதைய நிலவரப்படி சீனாவில் இருந்து இந்தியாவுக்கு இ விசா மூலமாக வர உடனடி தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த் தடை சீன பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கும் சீனாவில் தங்கி விட்டு வரும் மற்ற நாட்டினருக்கும் பொருந்தும்.   ஏற்கனவே இ விசா  வழங்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள விசா இனி செல்லுபடி ஆகாது என அறிவிக்கப்படுகிறது” என உள்ளது.