அகமதாபாத்: இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது மற்றும் இறுதி டி-20 போட்டியில், பேட்டிங்கில் வெளுத்து வாங்கிய இந்திய அணி, 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 224 ரன்களைக் குவித்தது.

கோப்பையை தீர்மானிக்கக்கூடிய இறுதி டி-20 போட்டியில், இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச முடிவெடுத்தது.

அதன்படி களமிறங்கிய இந்திய அணியில், முதல் 4 வீரர்கள் அனைவரும் அதிரடி காட்டினார். துவக்க வீரர் ரோகித் ஷர்மா 34 பந்துகளில் 64 ரன்களை அடித்து அவுட்டானார். சூர்யகுமார் 17 பந்துகளில் 32 ரன்களை அடித்தார்.

கேப்டன் கோலி 52 பந்துகளில் 80 ரன்களை அடித்து நாட்அவுட்டாக இருந்தார். ஹர்திக் பாண்ட்யா 17 பந்துகளில் 39 ரன்களை அடிக்க, இந்திய அணி, 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 224 ரன்களைக் குவித்தது.