துபாய்: சமீபத்தில் வெளியிடப்பட்ட ஐசிசி தரவரிசைப் பட்டியலில், டெஸ்ட் தரவரிசை முதலிடத்தை இந்திய அணியும், ஒருநாள் தரவரிசை முதலிடத்தை இங்கிலாந்து அணியும் பிடித்துள்ளன.

கடந்த 2015-16ம் ஆண்டுகளின் விபரங்கள் நீக்கப்பட்டு, 2016-17 மற்றும் 2017-18 ஆகிய ஆண்டுகளின் விபரங்கள் ஒப்பீடு செய்யப்பட்டு, அவைகளுக்கு தலா 50% சம மதிப்பீடு வழங்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது இந்த தரவரிசைப் பட்டியல்.

உலகக்கோப்பை போட்டிகள் துவங்குவதற்கு 1 மாதத்திற்கும் குறைவான நாட்களே இருக்கும் நிலையில், ஒருநாள் தரவரிசையில் இங்கிலாந்து அணி முதலிடம் பெற்றிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பெற்றிருக்கும் இந்திய அணிக்கு அடுத்த இடத்தில் இருக்கும் நியூசிலாந்து அணி, 8 முதல் 2 புள்ளிகள் வரை நெருங்கி நிற்கிறது. இந்தியா 116 புள்ளிகளையும், நியூசிலாந்து 108 புள்ளிகளையும் மேம்படுத்தல்(updation) நிலைக்கு முன்னதாகப் பெற்றிருந்தன.