டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 91,702 பேர் பாதிப்பு 3,403 உயிரிழந்துள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு  நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை இன்று காலை அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. அதன்படி,

கடந்த கடந்த 24 மணி நேரத்தில் 91,702 பேர் பாதிக்கப்ட்டுள்ளனர். இது நேற்றைய பாதிப்பை விட 2 ஆயிரம் குறைவாக உள்ளது.  இதுவரை 2,92,74,823 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று ஒரே நாளில் 3,403 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் 3,63,079 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 1,34,580 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தோர் மொத்த  எண்ணிக்கை 2,77,90,073 ஆக உயர்ந்துள்ளது.

தற்போதைய நிலையில் நாடு முழுவதும்  11,21,671 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாட்டில் இதுவரை 24,60,85,649 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.