டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 46,759 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 509 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, நாடு முழுவதும் புதிதாக 46,759 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. நேற்று முன்தினம் 37,593 ஆக பதிவாகி இருந்தது. நேற்று 44,658 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. தற்போது மேலும் அதிகரித்துள்ளது. இதன்மூலம் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,26,49,947 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 31,374 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,18,52,802 ஆக அதிகரித்துள்ளது.

ஆனாலும், கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தாக்குதலுக்கு 509 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,37,370  ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 3,59,775 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 1,03,35,290 பேருக்கு (ஒரு கோடியை தாண்டியது) தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இதுவரை 62 கோடி (62,29,89,134) பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 

[youtube-feed feed=1]