டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 42. 618 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தொற்று பாதிப்பில் இருந்து 36385 பேர் குணமடைந்துள்ளனர். மேலும், சிகிச்சை பலனின்றி 330 பேர் உயிரிழந்துள்ளனர்.
மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரொனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கி யுள்ளது தெரிய வந்துள்ளது. நேற்று முன்தினப் பாதிப்புக்கு நேற்றைய பாதிப்பு 6% குறைந்துள்ளது. தினசரி பாதிப்பு ஏறி இறங்கி காணப்படுகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 42 ஆயிரத்து 618 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. அதிகபட்சமாக கேரளாவில் மட்டும் 29,322 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,29,45,907 ஆக அதிகரித்துள்ளது.
தொற்று பாதிப்பு காரணமாக நேற்று ஒரே நாளில் 330 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,40,225 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 36,385 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,21,00,001 ஆக உயர்ந்துள்ளது. குணமடைவோர் விகிதம் 97.43 ஆக உயர்ந்துள்ளது. குணமடைவோர் விகிதம் 97.43% ஆக உயர்ந்துள்ளது.
தற்போதைய நிலையில், நாடுமுழுவதும் கொரோனா தொற்றுக்கு தற்போது 4,05,681 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது 1.23% ஆக உள்ளது.
வாராந்திர பாதிப்பு சதவிகிதம் 5 சதவிகிதத்தில் இருந்து 2.63 சதவிகிதமாக குறைந்துள்ளது.
இந்தியாவில் இதுவரை 67,72,11,205 பேருக்கு (கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 58,85,687 பேர்) கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.