டெல்லி: இந்தியாவில் மீண்டும் கொரோனாப திப்பு உயரத்தொடங்கி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 40,134 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதுடன், 39258 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அதே வேளையில் கொரோனா பாதிப்பு காரணமாக 541 பேர் பலியாகி உள்ளனர்.
மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள தகவலின்படி, கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4.24 லட்சத்தை தாண்டியுள்ளது. தொற்று பாதிப்பு கடந்த ஒரு வாரமாக படிப்படியாக உயர்த்தொடங்கி உள்ளதுதும் தெரிய வந்துள்ளது. ஆகஸ்டு இறுதியில் கொரோனா 3வது தாக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படும் நிலையில், தொற்று பாதிப்பு மீண்டும் உயரத்தொடங்கி உள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று ஒரே நாளில் புதிதாக மேலும், 40,134 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,16,95,958 ஆக உயர்ந்தது.
கொரோனா தொற்று காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 422 பேர் இறந்துள்ளனர். இதன்மூலம் நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,24,773 ஆக அதிகரித்துள்ளது.
அதேவேளையில் நேற்று மட்டும் தொற்றில் இருந்து ஒரே நாளில் 36,946 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,08,57,467 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 4,13,718 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்தியாவில் இதுவரை 47,02,98,596 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.