டெல்லி: இந்தியாவில் கொரோனா 2வது அலை உச்சம் பெற்றுள்ளது. நாளுக்கு நாள் உயர்ந்து வரும் பாதிப்பு காரணமாக, உலகிலேயே தினசரி பாதிப்பில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. தற்போது தினசரி பாதிப்பு 4லட்சத்தை நெருங்கியிருப்பதுடன், உயிரிழப்புகளும் 4ஆயிரத்தை நெருங்கி வருகிறது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3.79 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதுடன் 3 ஆயிரத்து 645 பேர் உயிரிழந்துள்ளனர்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,79 ,257 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 1,3 , 76 , 524 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 645 பேர் கொரோனாவால் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2, 04, 832 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 2,69,507 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த நிலையில், இதுவரை 1, 50,86,878 பேர் குணமடைந்துள்ளனர்.
தற்போதைய நிலையில், நாடு முழுவதும் தற்போது 30 லட்சத்து 84 ஆயிரத்து 814 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுரை நாடு முழுவதும் 15 கோடியே 20 ஆயிரத்து 648 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளது.