டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 40ஆயிரத்துக்கு கீழேயும், பலி எண்ணிகை ஆயிரத்துக்கு கீழேயும் குறைந்துள்ளது. சுமார் 102 நாட்களுக்கு பிறகு பாதிப்பு 40ஆயிரத்துக்கும் கீழே குறைந்து இருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 37,566 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,03,16,897 ஆக அதிகரித்து உள்ளது.
நேற்று ஒரே நாளில் தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 907 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 3,97,637 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஏப்ரல் 12ஆம் தேதிக்கு பிறகு முதல் முறையாக நேற்று 1000-க்கு கீழ் கொரோனா உயிரிழப்புகள் பதிவாகி உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 56,994 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,93,66,601 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்றுக்கு5,52,659 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஐசிஎம்ஆர் தகவலின்படி, 17,68,008 மாதிரிகள் நேற்று பரிசோதிக்கப்பட்டுள்ளது. இதுவரை 40,81,39,287 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டு உள்ளது.