டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 35,178 கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதுடன், மேலும் 440 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு ஏறி இறங்கி வருகிறது. நேற்று சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி 25,166 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், இன்று வெளியிட்டுள்ள தகவலின் படி மேலும் கூடுதலாக 10ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.
மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 35 ஆயிரத்து 178 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,22,85,857 ஆக அதிகரித்துள்ளது.
தொற்று பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் 440 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,32,519 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.34% ஆக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 37,169 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,14,85,923 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் குணமடைவோர் விகிதம் 97.51 ஆக உயர்ந்துள்ளது.
தற்போதைய நிலையில், கொரோனா தொற்று காரணமாக 3,67,415 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுவோர் விகிதம் 1.15% ஆக குறைந்துள்ளது.
இந்தியாவில் இதுவரை 56,06,52,030 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 55,05,075 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.