டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,76,070 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் 3,874 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தப்பட்டு வரும் வேளையும், தடுப்பூசி போடும் பணியும் அதிகரிக்கப்பட்டு உள்ளது.  இருந்தாலும் தொற்று பரவலின் தாக்கம் தீவிரமாகவே உள்ளது.

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 2,76,070 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,57,72,400 ஆக அதிகரித்துள்ள்து.

நேற்று ஒரே நாளில் கொரோனா காரணமாக  3,874 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 2,87,122 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் சிகிச்சை பெற்று வந்த 3,69,077 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், கொரோனாவிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 2,23,55,440 ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் தற்போது 31,29,878 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை 18,70,09,792 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 32,23,56,187 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டு உள்ளது. நேற்று மட்டும் 20,55,010 பேருக்கு சோதனை நடத்தப்பட்டு உள்ளது.