டெல்லி:  இந்தியாவில்  புதிதாக கடந்த 24 மணி நேரத்தில்  2,59,170 பேர் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதுடன்,  1,761 உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது.  கடந்த 4 நாட்களுக்கும் மேலாக தொடர்ச்சியாக 2 லட்சத்திற்கு மேலாக கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது.  நோயாளிகளுக்கு மருத்துவமனையில் இடம் கிடைக்ககாத அவலம் ஏற்பட்டுள்ள நிலையில், தடுப்பூசி தட்டுப்பாடு, ஆக்சிஜன் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. வருவது மக்களிடையே கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  இதை  கட்டுப்படுத்துவதில் மத்திய,  மாநில அரசுகள் தோல்வி அடைந்துள்ளது. ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர். தொடர் பாதிப்பு காரணமாக பலி எண்ணிக்கையும்  உயர்ந்து வருகிறது,

மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி,  இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,59,170 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,53,21,089 ஆக அதிகரித்துள்ளது.

அதுபேல நேற்று ஒரே நாளில் தொற்று பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில்  1,761 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,80,530 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 1,54,761 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,31,08,582 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்றுக்கு தற்போது 20,31,977 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் இதுவரை 12,71,29,113 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இதுவரை 26 கோடியே 94 லட்சத்து 14 ஆயிரத்து 035 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன .

நேற்று ஒருநாளில் மட்டும் 15,19,486 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.